Enable Javscript for better performance
காவல் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஒரு காவல் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
     இதன்படி புதுச்சேரி பிசிஆர் செல் ஆய்வாளர் என். வெற்றிவேல், காலாப்பட்டு காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதேபோல, நிரவி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெரோம் ஜாஸ்மன் புதுச்சேரி சிபிசிஐடி பிரிவுக்கும், பிஏபி மற்றும் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு (புட்செல்) உதவி ஆய்வாளர் ஜி. வேலைய்யன் நிரவி காவல் நிலைய அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான ஆணையை தேர்தல் துறை உத்தரவின் பேரில், டிஜிபி சுந்தரி நந்தா வழிகாட்டுதலின் பேரில் தலைமையக எஸ்.பி. கொண்டா வெங்கடேஸ்வரராவ் பிறப்பித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai