Enable Javscript for better performance
குண்டர் சட்டத்தின் கீழ் ரெளடி கைது- Dinamani

சுடச்சுட

    

    புதுவை மாநிலம், திருபுவனையைச் சேர்ந்த ரெளடி வெட்டு கார்த்தியை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
     திருபுவனை கொத்தபுரிநத்தம் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் வெட்டு கார்த்தி (எ) கார்த்திகேயன் (25). ரெளடியான இவர் மீது புதுவை மாநிலத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட வழக்குகளும், கடந்த மாதம் திருக்கனூரில் உள்ள மதுக் கடையில் குண்டுவீசிய வழக்கும் உள்ளது.
     இந்த நிலையில், கார்த்திகேயன் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், திருபுவனை காவல் உதவி ஆய்வாளர் கே. பிரியா, புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அபூர்வ குப்தா பரிந்துரையின் பேரில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் டி. அருண், கார்த்திகேயனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai