Enable Javscript for better performance
தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    புதுவை மாநிலம், கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
     விழாவை கல்லூரி முதல்வர் எஸ். மலர்க்கண் தொடங்கி வைத்தார். மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் எம். தனசேகரன், துணைத் தலைவர் எஸ்.வி. சுகுமாறன், செயலர் கே. நாராயணசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
     விழாவில் சிறந்த ஆசிரியைகளுக்கான எம்.வி.ஐ.டி. விஸ்வகர்மா விருதுகள் 60 ஆசிரியைகளுக்கு வழங்கப்பட்டன.
     சென்னை ஆரோ கல்வி சேவை நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி கே.ஆர். மாலதி பேசுகையில், பெண்கள் இழப்புகளை எதிர்கொண்டு சமாளித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.
     புதுவை அரியூர் முதன்மை சுகாதார மைய மருத்துவ அதிகாரி பிரேமா, பெண்களுக்கான உணவு முறை, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பற்றி எடுத்துரைத்தார்.
     இதில் தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி ஆசிரியைகள், மாணவிகள் பங்கேற்றனர்.
     நிறைவில் மேலாண்மைத் துறை பேராசிரியை ஸ்ரீதேவி நன்றி கூறினார்.
     விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறை தலைவர் வள்ளி, வேலைவாய்ப்புத் துறை அதிகாரி ஜெயகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai