Enable Javscript for better performance
புதுச்சேரியில் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    
    ops

    புதுச்சேரி மக்களவைத் தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதுச்சேரியில் புதன்கிழமை (மார்ச் 27) மாலை பிரசாரம் மேற்கொள்கிறார்.
     தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதுவை மாநிலத்துக்கு வரும் அவருக்கு, மாநில எல்லையான மதகடிப்பட்டில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, வில்லியனூரில் பிரசாரத்தை தொடங்கும் அவர், புதுச்சேரி மரப்பாலம், தவளக்குப்பம் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி பேசுகிறார்.
     இத்தகவலை புதுவை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் தெரிவித்தார்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai