Enable Javscript for better performance
வாகனச் சோதனையில் வங்கிப் பணம் ரூ. 40 லட்சம் பறிமுதல்: ஆவணங்கள் சமர்ப்பித்ததால் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    வாகனச் சோதனையில் வங்கிப் பணம் ரூ. 40 லட்சம் பறிமுதல்: ஆவணங்கள் சமர்ப்பித்ததால் ஒப்படைப்பு

    By DIN  |   Published on : 27th March 2019 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி வழியாக உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட வங்கிப் பணம் ரூ.40 லட்சம் தேர்தல் பறக்கும் படை அலுவலர்களால் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
     வங்கி அதிகாரிகள் உரிய ஆவணங்களைக் கொண்டு வந்து காண்பித்தனர். இதன் பிறகே பணம் விடுவிக்கப்பட்டது.
     தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் விழுப்புரம் கருவூலத்திலிருந்து, விழுப்புரம் மாவட்டம், ராம்பாக்கம் வங்கிக் கிளைக்கு ரூ. 500, ரூ. 100, ரூ.50 நோட்டுகள் அடங்கிய ரூ. 40 லட்சம் பணத்தை வங்கி அதிகாரிகள் தனியார் காரில் எடுத்துக்கொண்டு புதுச்சேரி வழியாக செவ்வாய்க்கிழமை சென்றனர்.
     இவர்களை மடுகரை சோதனைச்சாவடியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி மாசிலாமணி தலைமையிலான அலுவலர்கள் நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள உரிய ஆவணங்களின்றி வங்கிப் பணம் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் காருடன் ரூ. 40 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து, மடுகரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், வருமான வரித் துறை அலுவலர்களுக்கும் தகவல் அளித்தனர்.
     தகவலின் பேரில் அங்கு வந்த வருமான வரித் துறை அலுவலர் பாலமுரளி தலைமையிலான அலுவலர்களிடம், வங்கி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு உரிய ஆவணங்களை ஒப்படைத்தனர். இதையடுத்து, ரூ. 40 லட்சம் பணத்தை அதிகாரிகள் விடுவித்தனர்.
     பிற்பகலில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு, வங்கி அதிகாரிகள் ஆவணங்களை இரவில்தான் கொண்டு வந்து காண்பித்தனர். இதன் பிறகே பணம் விடுவிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai