Enable Javscript for better performance
அமிர்த வித்யாலயம் பள்ளியில் அரசு மூலம் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    அமிர்த வித்யாலயம் பள்ளியில் அரசு மூலம் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் 

    By DIN  |   Published on : 28th March 2019 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி அருகே மூலக்குளத்தில் உள்ள அமிர்த வித்யாலயம் பள்ளியில் கல்வித்துறை மூலம் நிரப்பப்படும் மாணவர் சேர்க்கைக்கு ஏப்.12-ஆம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து புதுவை அரசு பள்ளிக் கல்வி இயக்குநர் ருத்ர கெளடு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மூலக்குளம் ஜெ.ஜெ. நகர் விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள அமிர்த வித்யாலயம் பள்ளியில் 2019-20-ஆம் கல்வியாண்டில் பிரிகேஜி, எல்கேஜி பிரிவின் மொத்த மாணவர் எணணிக்கையில் 10 விழுக்காடு (ஒவ்வொரு வகுப்பிலும் 9 இடங்கள்) மாணவர்கள் பள்ளிக் கல்வித் துறையின் மூலம் நிரப்பப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் விளக்கக் கையேட்டை schooledn.puducherry.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். புதுவை மாநிலத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர்(ஆண்டு வருமானம் ரூ.75 ஆயிரத்துக்கு குறைவான வருமானம் உள்ளோர்) மற்றும் எல்கேஜி வகுப்புக்கு 31.3.2016 அன்றோ அல்லது அதற்கு முன்போ, பிரிகேஜி வகுப்புக்கு 31.3.2017 அன்றோ, அதற்கு முன்போ, பிறந்த மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியுடையோர் ஆவர். இவ்வாறு அரசு மூலம் சேர்க்கப்படுவோரின் கல்விக் கட்டணத்தை பெற்றோரே செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை இணை இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை, புதுச்சேரி என முகவரியிட்ட உறையினில் வைத்து ஏப்.12-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ருத்ர கெளடு.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai