Enable Javscript for better performance
இரட்டை கொலை வழக்கு: 9 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    இரட்டை கொலை வழக்கு: 9 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை

    By DIN  |   Published on : 28th March 2019 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியை அடுத்த பாகூர் அருகே கடந்த 2009-ஆம் ஆண்டு இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
     புதுவை மாநிலம், பாகூர் அருகே சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றில் மணல் அள்ளுபவர்களிடம் பணம் வசூலிப்பதில், சோரியாங்குப்பம் கோவில் தெருவைச் சேர்ந்த இளங்கோ (58), அதே பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் (59) ஆகிய இரு கோஷ்டிகளுக்கு இடையே கடந்த 2009-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி மோதல் ஏற்பட்டது.
     இதில், சோரியாங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமதாஸ் மகன் பரஞ்ஜோதி (45), மேட்டுத் தெருவைச் சேர்ந்த காத்தவராயன் மகன் ஞானப்பிரகாசம் (29), கலியபெருமாள் உள்ளிட்டோரை இளங்கோ (57), இவரது தம்பிகள் ஆறுமுகம் (47), ரகு (43), மேட்டுத் தெருவைச் சேர்ந்த சிவக்கொழுந்து மகன் அய்யனார் (41), இவரது தம்பி சுதன் (29), கோவில் தெருவைச் சேர்ந்த பெரியண்ணன் (69), இவரது மகன் வெற்றிவேல் (37), மேட்டுத் தெருவைச் சேர்ந்த வரதராஜ் மகன் ராஜ்குமார் (37), நடுத் தெருவைச் சேர்ந்த குப்புராஜ் மகன் கவிராஜ் (31) ஆகிய 9 பேரும் சேர்ந்து சரமாரியாக வெட்டினர்.
     இதில் பரஞ்ஜோதி, ஞானப்பிரகாசம் உயிரிழந்தனர். கலியபெருமாளுக்கு கால் துண்டானது. ராம்குமார், பூபதி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து கலியபெருமாள் அளித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸார் கொலை வழக்கு பதிந்து, இளங்கோ உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.
     இந்த வழக்கு புதுச்சேரி 2 கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சுபா அன்புமணி முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, இருவரை கொலை செய்த வழக்கில் இளங்கோ, ஆறுமுகம், ரகு, அய்யனார், சுதன், பெரியண்ணன், வெற்றிவேல், ராஜ்குமார், கவிராஜ் ஆகிய 9 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், சட்டவிரோத கூடுதலுக்காக 3 ஆண்டுகள் சிறையும், கொலை முயற்சிக்காக 10 ஆண்டுகள் சிறையும், பொருள்களை சேதப்படுத்தியதற்காக ஓராண்டு சிறையும், 9 பேருக்கும் தலா ரூ. 16,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai