Enable Javscript for better performance
கர்ப்பிணிகளுக்கான சுகாதார விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை அரசின் நலவழித் துறையின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம், குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய ஹோமியோபதி பிரிவு இணைந்து நடத்திய கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பு சுகாதார விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
     சுகாதார உதவி ஆய்வாளர் வெங்கடராமன் வரவேற்றார். ஹோமியோபதி மருத்துவர் உஸஸ் தலைமை வகித்து, கர்ப்பக் காலத்தில் ஏற்படும் ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்து எடுத்துக் கூறினார்.
     மருத்துவ அதிகாரி அஜ்மல், சுகாதார ஆய்வாளர் யசோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஹோமியோபதி மக்கள் குறைதீர் அதிகாரி பாலாஜி பங்கேற்று, கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்துகள் குறித்து எடுத்துரைத்தார்.
     நிகழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடிய கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள், உலர் பழங்கள், பருப்பு வகைகள், முட்டைகள், இறைச்சி, மீன்கள் ஆகியவை பற்றிய விளக்கப் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, புதுவை பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி மாணவிகள் மூலம் விளக்கப்பட்டது.
     நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுகாதார உதவி ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர்கள் செய்திருந்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai