Enable Javscript for better performance
காங்கிரஸ் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு நிர்வாகிகள்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை பிரதேச காங்கிரஸ் அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
     இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஏ. நமச்சிவாயம் வெளியிட்ட அறிக்கை:
     மாநிலத் தலைவராக ஏ.ஆர். செல்வகணபதி நியமிக்கப்பட்டுள்ளார். ஐ. பாலகிருஷ்ணன், ஏ. ரவிச்சந்திரன் ஆகியோர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். செயலர்களாக பி. குமரன், எஸ். ஜனார்த்தனன், ஆர். மோகன், ஏ. சத்யநாராயணன், ஜி. ரமேஷ், க. கதிர்வேல், ஒருங்கிணைப்பாளர்களாக ஏ. கார்த்திகேயன் (போக்குவரத்து), எஸ். செந்தில் (வேளாண் தொழிலாளர்கள்), ஆர். ஜெயலட்சுமி (தன்னார்வ தொண்டு), எஸ். ராஜேந்திரன் (கட்டுமானத் தொழிலாளர்கள், பியூட்டி பார்லர் தொழிலாளர்கள்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
     புதுச்சேரி மத்திய மாவட்டத் தலைவராக வி. ராஜ்மோகன், தெற்கு மாவட்டத் தலைவராக எஸ். சுப்பிரமணி, வடக்கு மாவட்டத் தலைவராக பி. அருள்ராஜ், காரைக்கால் மாவட்டத் தலைவராக கே. மெய்யப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
     மேலும், தொகுதி வாரியாக 26 வட்டாரத் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai