Enable Javscript for better performance
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 10 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 10 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

    By DIN  |   Published on : 28th March 2019 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த 11 பேரில் 10 பேரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
     இத்தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட செவ்வாய்க்கிழமை வரை 11 பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி
     ஆர்.ஸ்மித்ரா தலைமையில் வேட்புமனு பரிசீலனை புதன்கிழமை நடைபெற்றது.
     அப்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ப.நெடுஞ்செழியன் (என்.ஆர்.காங்கிரஸ்), க.வெங்கடேசன் (திமுக), பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பா.கெüரி (நாம் தமிழர் கட்சி), க.ரவிசங்கர் (புதுச்சேரி வளர்ச்சிக் கட்சி), எஸ்.ஸ்ரீதர் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), சுயேச்சைகள் முனைவர் க.தமிழமல்லன், இ.மன்னாதன், ந.முருகசாமி (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்), த.ரமேஷ், பா.வேல்முருகன் என மொத்தம் 10 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
     உரிய விவரம் முழுமையாக இல்லாததால் சுயேச்சை ஒருவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
     தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லாதவர்கள் மார்ச் 29-ஆம் தேதிக்குள் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் மார்ச் 29-ஆம் தேதி வெளியிடப்படும்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai