Enable Javscript for better performance
"புதுவைக்கு மாநில அந்தஸ்தை வைத்திலிங்கம் பெற்றுத் தருவார்'- Dinamani

சுடச்சுட

    

     "புதுவைக்கு மாநில அந்தஸ்தை வைத்திலிங்கம் பெற்றுத் தருவார்'

    By DIN  |   Published on : 28th March 2019 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவைக்கு மாநில அந்தஸ்தை வைத்திலிங்கம் பெற்றுத் தருவார் என்று திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
     புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வெ.வைத்திலிங்கத்தை ஆதரித்து புதுச்சேரி அருகே தவளக்குப்பம், அரியாங்குப்பம், முதலியார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
     காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பொது வாழ்வில் நிறைந்த அனுபவம் கொண்டவர். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதற்கான வல்லமை வைத்திலிங்கத்துக்குத்தான் உண்டு. மத்திய அமைச்சரவையிலும் அவர் இடம்பெறுவார். ஏழைகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
     மத்தியில் அடுத்து அமையப்போவது காங்கிரஸ் ஆட்சிதான். கருத்துக்கணிப்பு என்பது மாயை. நாடு முழுவதும் கடந்த ஓராண்டாக நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தல், மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவியது.
     ஒரே நாடு, ஒரே வரி என்று ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. ஆனால் பெட்ரோல், டீசலை ஏன் அதில் சேர்க்கவில்லை. ஜிஎஸ்டி வந்த பிறகு தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரம் தொழில்சாலைகள் மூடப்பட்டு, 50 லட்சம் பேர் வேலை இழந்தனர். நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. இதில் அதிகம் வீசுவது புதுவையில்தான். திமுக-காங்கிரஸ் கூட்டணி இயற்கையானது. பாஜக-அதிமுக-என்.ஆர்.காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி என்றார் நாஞ்சில் சம்பத்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai