Enable Javscript for better performance
லாட்டரி விற்ற இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் பகுதியில் லாட்டரி விற்ற இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
     அரியாங்குப்பம் மாஞ்சாலை சாலைப் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பதாக அரியாங்குப்பம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார், அங்குள்ள சைக்கிள் கடையில் சோதனையிட்டனர்.
     சோதனையில், கடையின் உரிமையாளரான நாகராஜ் (36) , அவரது நண்பரான சின்னவீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் நாகலிங்கம் (49) ஆகிய இருவரும் போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
     இதையடுத்து போலீஸார், நாகராஜ், நாகலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து ரூ. 4,350 ரொக்கப் பணம், லாட்டரி சீட்டு எண்களை எழுதும் நோட்டுகள், செல்லிடப்பேசி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai