Enable Javscript for better performance
வாகனச் சோதனையில் காப்பீட்டு நிறுவனத்தின் ரூ. 22.75 லட்சம் பறிமுதல்: ஆவணங்கள் சமர்ப்பித்த பிறகு ஒப்பட- Dinamani

சுடச்சுட

    

    வாகனச் சோதனையில் காப்பீட்டு நிறுவனத்தின் ரூ. 22.75 லட்சம் பறிமுதல்: ஆவணங்கள் சமர்ப்பித்த பிறகு ஒப்படைப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தின் ரூ. 22.75 லட்சம் போலீஸாரால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகளிடம் ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு பணம் ஒப்படைக்கப்பட்டது.
     புதுச்சேரி புஸ்ஸி வீதியில் ஒதியஞ்சாலை காவல் ஆய்வாளர் அறிவுச்செல்வன், உதவி ஆய்வாளர் கீர்த்தி தலைமையிலான போலீஸார் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
     அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.22 லட்சத்து 75 ஆயிரம் எடுத்துச் செல்லப்படுவது தெரிய வந்தது.
     பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆயுள் காப்பீட்டு நிறுவனத்ஜ்திலிருந்து தனியார் வங்கியில் செலுத்துவதற்காக அந்தப் பணம் கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது. பின்னர், வருமான வரித் துறை அதிகாரிகளிடம் அந்தப் பணத்தை போலீஸார் ஒப்படைத்தனர்.
     தேர்தல் அதிகாரி (ஏஆர்ஓ) பாபு, வருமான வரித் துறை அதிகாரி கணேசன் ஆகியோர் முன்னிலையில் காப்பீட்டு நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் அன்று மாலையில் பணத்துக்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai