Enable Javscript for better performance
வாகனச் சோதனையில் ரூ.ஒரு லட்சம் துணிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான துணிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
     புதுச்சேரி காலாப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் தலைமையிலான போலீஸார் புதுச்சேரி எல்லையான கனகசெட்டிக்குளம் பகுதியில் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
     அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் இருந்தவர்கள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பரத் (34), அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கவியரசன் (29) ஆகியோர் என்பதும், இவர்கள் உரிய ஆவணங்களின்றி ரூ. ஒரு லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான 340 சட்டை துணிகள், டி-சர்ட்டுகள் அடங்கிய துணிகளை விற்பனைக்காக எடுத்துச் செல்வது தெரியவந்தது.
     இதையடுத்து துணிகளை பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     அலுமினிய பாத்திரங்கள் பறிமுதல்: புதுச்சேரி காலாப்பட்டு எல்லைப் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி தனபாலன் தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
     அப்போது, சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு நோக்கி வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர். வேனில் பழைய பாத்திர வியாபாரி அம்பிகாபதி என்பவர் உரிய ஆவணங்களின்றி விற்பனைக்காக ரூ. 82 ஆயிரம் மதிப்பிலான 271 அலுமினிய பாத்திரங்களை சென்னையிலிருந்து எடுத்துச் செல்வது தெரியவந்தது. பாத்திரங்களுக்கு உரிய ஆவணங்களோ, பாத்திரங்கள் எங்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என்பதற்கான ஆவணமோ இல்லாததால், பாத்திரங்களை வேனுடன் தேர்தல் பறக்கும் படையினர் வடக்கு பகுதி துணை ஆட்சியர் சுதாகரிடம் ஒப்படைத்தனர்.
     பின்னர் அவர் மேல் நடவடிக்கைக்காக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் குழுவிடம் ஒப்படைத்தார். இது குறித்து குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai