ஆய்வக உதவியாளர் தற்கொலை
By DIN | Published On : 06th May 2019 01:05 AM | Last Updated : 06th May 2019 01:05 AM | அ+அ அ- |

ஆய்வக உதவியாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி காந்தி நகர், 2 -ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் சதீஷ்குமார் (20). புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இவர், சந்தியா என்பவரை காதலித்து கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சதீஷ்குமார் சரிவர வேலைக்கு செல்லாத காரணத்தால், சந்தியா கடந்த 10 நாள்களுக்கு முன்பு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதில், மனமுடைந்து காணப்பட்ட சதீஷ்குமார், சனிக்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.