ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு உழவர்கள் சங்கம் கண்டனம்

தமிழகம், புதுவையில் நிறைவேற்றவுள்ளதாகக் கூறப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு புதுச்சேரி

தமிழகம், புதுவையில் நிறைவேற்றவுள்ளதாகக் கூறப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு புதுச்சேரி பிரதேச நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து புதுச்சேரி பிரதேச நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் சங்கத்தின் பிரதேச தலைவர் ரா.வேணுகோபால், பொதுச் செயலர் பா.ராமலிங்கம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
விழுப்புரம், புதுச்சேரி மாவட்ட வேளாண் விளை நிலங்களில் வேதாந்தா நிறுவனம் சார்பில், 116 ஹைட்ரோ கார்பன் திட்ட கிணறுகள் அமைக்கவுள்ளதாகவும், அதற்கான ஆய்வு கிணறுகள் 246 இடங்களில் சோதனை அடிப்படையில் அமைக்க உள்ளதாகவும் தெரியவருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, திண்டிவனம், வானூர் ஆகிய பகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்தில் மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், பாகூர், வில்லியனூர் கொம்யூன் பகுதிகளிலும் கிணறுகள் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.
ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் உணவளிக்கும் விளை நிலங்கள் அதிகமாக உள்ள இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி வழங்க, விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டங்கள் இதுவரை நடத்தப்படவில்லை. எனவே, இந்தத் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்துள்ள மத்திய அரசுக்கும், மத்திய அரசின் திட்டங்களை ஆமோதிக்கும் மாநில அரசுகளுக்கும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேற்கண்ட செயல்கள் மேலும் தொடர்ந்தால், அனைத்துப் பகுதி வேளாண் பெருமக்களையும் ஒருங்கிணைந்து போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும். எனவே, ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com