சுடச்சுட

    

    பிளஸ் 1 சேர்க்கை: விண்ணப்பம் வழங்கும் தேதி நாளை வரை நீட்டிப்பு

    By DIN  |   Published on : 16th May 2019 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ் 1 சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கும் தேதி மே 17 வரை நீட்டிக்கப்பட்டது.
     இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் ம.குப்புசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2019 - 20ஆம் கல்வியாண்டின் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வந்தன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கடைசி நாளாக மே 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
     இந்த நிலையில், இதுவரை பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவர்களின் நலன் கருதி, விண்ணப்பங்கள் வழங்கும் தேதி மே 17 மாலை 5.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai