புதுவை பல்கலை.யில் எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 16th May 2019 08:32 AM | Last Updated : 16th May 2019 08:32 AM | அ+அ அ- |

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.
புதுவைப் பல்கலைக்கழக மேலாண்மை ஆய்வியல் துறை சார்பில், முதுநிலை வணிக நிர்வாகம் (எம்பிஏ) மற்றும் வணிகப் பகுப்பாய்வு (பிசினஸ் அனாலிடிக்ஸ்) ஆகிய இரண்டு பிரிவுகளில் 2019-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் பல்வேறு இட ஒதுக்கீடுகளின் கீழ் சில இடங்கள் காலியாக உள்ளன.
இந்த நிலையில், 2018-ஆம் ஆண்டுக்கான எம்பிஏ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு எழுதி (கேட்) மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்கள், புதுவைப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயில விரும்பினால், புதுவைப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்தில் (http://www.pondiuni.edu.in) வெளியிடப்படுள்ள கூடுதல் விவரங்களை தெரிந்துகொண்டு, தகுதியுள்ளவர்கள் அதற்கேற்றவாறு இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.