சுடச்சுட

  

  புதுச்சேரி கோர்க்காடு ஏரியில் ரூ. 63 லட்சம் செலவில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி புதன்கிழமை ஆய்வு செய்தார்.
   புதுவை மாநிலத்தில் 84 ஏரிகள் உள்ளன. மத்திய அரசு நிதி மூலம் இந்த ஏரிகள் தூர் வாரப்படுகின்றன.
   இதுவரை 17 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. ஏம்பலம் தொகுதி கோர்க்காடு கிராமத்தில் உள்ள ஏரியைத் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, சுற்றுலாத் தலம் அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, ரூ. 63 லட்சம் செலவில் கோர்க்காடு ஏரியைத் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தி, சுற்றுலாத் தலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
   இதையடுத்து அமைச்சர் கந்தசாமி, அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்களுடன் இதுதொடர்பாக புதன்கிழமை ஆய்வு செய்தார். ஆய்வின் போது பொதுப் பணித் துறைச் செயலர் பார்த்திபன், தலைமைப் பொறியாளர் சிவலிங்கம், சுற்றுச் சூழல் பாதுகாப்புத் துறை பொறியாளர் காளமேகம், சுற்றுலாத் துறை இயக்குநர் முகமது மன்சூர், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, அதிகாரிகளிடம் உடனடியாக ஏரியைத் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தும்படி அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பணிகளை விரைவுபடுத்தவும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
   இதுகுறித்து பொதுப் பணித் துறைச் செயலர் பார்த்திபன் கூறுகையில், "நீர்நிலைகளைப் பாதுகாக்க இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இதை முழுமையாக பயன்படுத்தி நிலத்தடி நீரை உயர்த்தவும், மழை நீரைச் சேமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரு வாரத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai