இனிமேலாவது மக்களின் குரலுக்கு கிரண் பேடி மதிப்பளிக்க வேண்டும்

இனிமேலாவது மக்களின் குரலுக்கு புதுவை ஆளுநர் கிரண் பேடி மதிப்பளிக்க வேண்டும் என்று புதுவை மக்களவைத் தொகுதி எம்.பி.யாகத் தேர்வான வெ.வைத்திலிங்கம் வலியுறுத்தினார்.

இனிமேலாவது மக்களின் குரலுக்கு புதுவை ஆளுநர் கிரண் பேடி மதிப்பளிக்க வேண்டும் என்று புதுவை மக்களவைத் தொகுதி எம்.பி.யாகத் தேர்வான வெ.வைத்திலிங்கம் வலியுறுத்தினார்.
 புதுவை மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தின நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் பேசியதாவது:
 புதுவையில் காங்கிரஸ் கட்சியினர் வாங்கித் தந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றோம். நான் பெற்ற வெற்றி காங்கிரஸ் வலிமைக்கு எடுத்து காட்டாகவும், ராகுல் காந்தியின் குரலுக்கு மக்கள் அளித்துள்ள மதிப்பாகவும் கருதுகிறேன். இந்த வெற்றியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஒத்துழைப்பும் அதிகம் இருந்தது.
 ஆட்சியாளர்களின் குரலுக்கு புதுவை மக்கள் செவி சாய்த்துள்ளனர். நம்மை மோசமான முறையில் நடத்திய ஆளுமையை (ஆளுநர் கிரண் பேடியை) மக்கள் தட்டிக் கேட்டுள்ளனர். புதுவை அரசுக்கான உரிமையை மக்கள்தான் தர வேண்டும் என்ற எண்ணத்தைக் காட்டியுள்ளனர்.
 இனியாவது அமைச்சரவை எடுக்கும் முடிவை முழுமையாக ஏற்று, ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் தர வேண்டும். "மக்கள் குரலே மகேசன் குரல்' என்று மத்தியில் ஆள்பவர்கள் கூறுவதைப் போல, புதுவை மாநிலத்திலும் மக்களின் குரலுக்கு புதுவை மாநில நிர்வாகி
 (ஆளுநர்) மதிப்பளிக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com