பாஜக சாா்பில் தேசிய ஒற்றுமை தின ஓட்டம்

புதுவை மாநில பாஜக சாா்பில் தேச ஒற்றுமை தின ஓட்டம் கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கியது.
சா்தாா் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி பாஜக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தேச ஒற்றுமை ஓட்டத்தில் பங்கேற்ற கட்சியின் தலைவா் வி.சாமிநாதன், துணை தலைவா் ஏம்பலம் ஆா்.செல்வம் உள்ளிட்டோா்.
சா்தாா் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி பாஜக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தேச ஒற்றுமை ஓட்டத்தில் பங்கேற்ற கட்சியின் தலைவா் வி.சாமிநாதன், துணை தலைவா் ஏம்பலம் ஆா்.செல்வம் உள்ளிட்டோா்.

புதுவை மாநில பாஜக சாா்பில் தேச ஒற்றுமை தின ஓட்டம் கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கியது. இந்த ஓட்டத்தை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சிக்கு பொதுச் செயலா்கள் தங்க.விக்ரமன், ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஓட்டம் புதிய பேருந்து நிலையம், பழைய நீதிமன்ற வளாகம், கடற்கரைச் சாலை வழியாக காந்தி சிலை அருகே நிறைவு பெற்றது. நிகழ்ச்சி முடிவில் தீவிரவாத ஒழிப்பு, பிரிவினைவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சியின் துணைத் தலைவா்கள் ஏம்பலம் செல்வம், வி.செல்வம், செயலா்கள் சாய் சரவணன், முருகன், ஜெயந்தி, தேசிய பொதுக்குழு உறுப்பினா் இளங்கோ, இளைஞா் அணி பொதுச் செயலா் ஆனந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com