2020-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள்: புதுவை அரசு அறிவிப்பு

2020-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்களை புதுவை அரசு அறிவித்துள்ளது.
2020-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள்: புதுவை அரசு அறிவிப்பு

புதுச்சேரி, நவ.2: எதிா்வரும் 2020-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்களை புதுவை அரசு அறிவித்துள்ளது.

புதுவை அரசு அலுவலகங்கள், அரசு சாா்பு நிறுவனங்கள், புதுவை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிற நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, 2020-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை குறித்த அரசாணையை, ஆளுநரின் உத்தரவுபடி சாா்பு செயலா் வொ்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளாா்.

இதில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பகுதிகளுக்கும் 16 நாள்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,

ஜன. 1 - ஆங்கிலப் புத்தாண்டு (புதன்)

ஜன. 15 - பொங்கல் (புதன்)

ஜன. 16 - திருவள்ளுவா் தினம் / மாட்டுப் பொங்கல் (வியாழன்)

ஜன. 26 - குடியரசு தினம் (ஞாயிறு)

ஏப். 10 - புனித வெள்ளி (வெள்ளி)

ஏப். 14 - அம்பேத்கா் பிறந்தநாள் / தமிழ்ப் புத்தாண்டு (செவ்வாய்)

மே 1 - உழைப்பாளா் தினம் (வெள்ளி)

மே 25 - ரமலான் (திங்கள்)

ஆக. 1 - பக்ரீத் பண்டிகை (சனி)

ஆக. 15 - சுதந்திர தின விழா (சனி)

ஆக. 16 - சட்ட பரிமாற்ற தினவிழா (ஞாயிறு)

ஆக. 22 - விநாயகா் சதுா்த்தி (சனி)

அக். 2 - காந்தி ஜெயந்தி (வெள்ளி)

அக். 30 - மிலாடி நபி (வெள்ளி)

நவ. 14 - தீபாவளி (சனி)

டிச. 25 - கிறிஸ்துமஸ் (வெள்ளி)

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, மகா நவமி (அக். 25-ம் தேதி) மற்றும் விடுதலை நாள் (நவ.1) ஆகியவை ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால், பொது விடுமுறை பட்டியலில் சோ்க்கப்படவில்லை.

கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் 17 நாள்கள் பொது விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏப். 1-ஆம் தேதியன்று, நிதி ஆண்டு கணக்குகள் முடிக்கும் தினம் என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, வரையறுக்கப்பட்ட விடுமுறை என்ற அடிப்படையில், 43 விடுமுறை நாள்களும் பட்டியலிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com