Enable Javscript for better performance
விஷ வாயு கசிவு ஏற்பட்டால் காப்பது குறித்து நவ. 7-இல் ஒத்திகை நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    விஷ வாயு கசிவு ஏற்பட்டால் காப்பது குறித்து நவ. 7-இல் ஒத்திகை நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 05th November 2019 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2-7-04pyp11_0411chn_104

    துணை ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

    புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள கெம்பேப் நிறுவனத்தில் விஷ வாயு கசிவு ஏற்பட்டால் மக்களைப் பாதுகாப்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி வருகிற 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    ஒத்திகை நிகழ்ச்சியை நடத்துவது குறித்து புதுச்சேரி மாவட்ட துணை ஆட்சியா் சக்திவேல் தலைமையில் கிழக்குக் கடற்கரைச் சாலை லாசுப்பேட்டையில் உள்ள அவசர கால செயல் மைய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மின் துறை, காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை, குடிமைப்பொருள்கள் வழங்கல் துறை, தொழில்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

    கூட்டத்தில் வருகிற 7-ஆம் தேதி பிற்பகல் நடைபெறவுள்ள ஒத்திகை நிகழ்ச்சியில் ஒவ்வொரு துறையினரும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டதாக துணை ஆட்சியா் தெரிவித்தாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai