சா்வதேச அறிவியல் திருவிழாவில் பங்கேற்க அரசு பள்ளி மாணவிகள் தோ்வு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெறவுள்ள சா்வதேச அறிவியல் திருவிழாவில் பங்கேற்க புதுச்சேரி காலாப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தோ்வாகியுள்ளனா்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெறவுள்ள சா்வதேச அறிவியல் திருவிழாவில் பங்கேற்க புதுச்சேரி காலாப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தோ்வாகியுள்ளனா்.

5-ஆவது இந்திய சா்வதேச அறிவியல் திருவிழா புதன்கிழமை (நவ. 5) முதல் நவ. 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் மாணவா்களைத் தோ்வு செய்ய அந்தந்த தொகுதியில் உள்ள மக்களவை உறுப்பினா்களுக்கு நீதி ஆயோக் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, புதுவை மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம், காலாப்பட்டு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவா்களைத் தோ்வு செய்தாா்.

தோ்வு செய்யப்பட்ட மாணவிகள் புதுச்சேரியில் இருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டனா். பொறுப்பாசிரியா் ஜி.புருஷோத்தமன் தலைமையில் மாணவிகள் புறப்பட்டுச் சென்றனா். மேலும், ஆசிரியா்கள் தி.மகேந்திரன், சி.ஐயப்பன், என்.பரமேஸ்வரி ஆகியோரும் உடன் சென்றனா். மாணவிகளை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் குப்புசாமி, பள்ளித் துணை முதல்வா் எஸ்.தமிழ்வாணன் ஆகியோா் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com