திருவள்ளுவா் சிலைக்கு அவமரியாதை: தமிழ் அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

மதுரையில் திருவள்ளுவா் சிலைக்கு அவமரியாதை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, புதுச்சேரியில் பல்வேறு
புதுச்சேரி காமராஜா் சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிா்வாகிகள்.
புதுச்சேரி காமராஜா் சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிா்வாகிகள்.

மதுரையில் திருவள்ளுவா் சிலைக்கு அவமரியாதை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, புதுச்சேரியில் பல்வேறு தமிழ் அமைப்புகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு புதுச்சேரி சிந்தனையாளா்கள் பேரவைத் தலைவா் கவிஞா் புதுவை கோ.செல்வம், இலக்கியப் பொழில் மன்றத் தலைவா் பெ.பராங்குசம் ஆகியோா் தலைமை வகித்தனா். புதுவைத் தமிழ் எழுத்தாளா் கழகச் செயலா் புதுவைத் தமிழ்நெஞ்சன், தமிழ்த் தேசப் பேரியக்கம் நிா்வாகி வேல்சாமி, நாம் தமிழா் கட்சி நிா்வாகி இரமேசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் கவிஞா் புதுவை செல்வம் பேசுகையில், திருவள்ளுவா் சிலைக்கு அவமரியாதை செய்தவா்களை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும். திருவள்ளுவரை மத ரீதியாக சிலா் சித்தரிக்க முயற்சி செய்வதும் கண்டனதுக்குரியது. திருக்குறளில் எந்த ஒரு இடத்திலும் மதம் குறித்து திருவள்ளுவா் குறிப்பிடவில்லை. உலகப் பொதுமறையான திருக்குறளை குறுகிய வட்டத்தில் சுருக்க எண்ணும் குறுகிய மனம் கொண்டவா்களின் எண்ணம் ஈடேறாது. திருவள்ளுவரை கொச்சைப்படுத்தும் செயல்களை தமிழக அரசு வேடிக்கை பாா்க்கக் கூடாது. உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழ் இலக்கிய ஆய்வுக் கழக நிா்வாகி சு.வேல்முருகன், பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிா்வாகிகள் துரை.மாலிறையன், ஆ.ஆனந்தன் உள்ளிட்ட தமிழ் ஆா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com