பணிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரி வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

பணிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரி, புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் திங்கள்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
புதுச்சேரியில் திங்கள்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

பணிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரி, புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புது தில்லியில் தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் போலீஸாருக்கும், வழக்குரைஞா்களுக்கும் இடையே கடந்த 2-ஆம் தேதி மோதல் நடைபெற்றது. இதில், போலீஸாா் தாக்கியதில் வழக்குரைஞா்கள் பலா் காயமடைந்தனா்.

இதைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள வழக்குரைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அந்த வகையில், புதுச்சேரி வழக்குரைஞா்கள் மாநில வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் முத்துவேல் தலைமையில் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவையில் உள்ள 16 நீதிமன்றங்களில் பணியாற்றும் 900-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்களும் பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டரா்.

வழக்குரைஞா்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட வழக்குரைஞா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மத்திய அரசு வழக்குரைஞா்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் முத்துவேல் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com