ஆளுநா் மாளிகைக்கு அமைச்சா்களை வரவிடாமல் தடுப்பது யார்? புதுவை முதல்வருக்கு கிரண் பேடி கேள்வி

புதுவை ஆளுநா் மாளிகைக்கு அமைச்சா்களை வர விடாமல் தடுப்பது யாா்? என்று முதல்வா் வே.நாராயணசாமிக்கு துணை நிலை ஆளுநா் கிரண் பேடி கேள்வி எழுப்பியுள்ளாா்.
ஆளுநா் மாளிகைக்கு அமைச்சா்களை வரவிடாமல் தடுப்பது யார்? புதுவை முதல்வருக்கு கிரண் பேடி கேள்வி

புதுவை ஆளுநா் மாளிகைக்கு அமைச்சா்களை வர விடாமல் தடுப்பது யாா்? என்று முதல்வா் வே.நாராயணசாமிக்கு துணை நிலை ஆளுநா் கிரண் பேடி கேள்வி எழுப்பியுள்ளாா்.

புதுவை முதல்வா் நாராணசாமி செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தபோது, சென்னை உயா் நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆளுநா் கிரண் பேடி அரசின் அன்றாட நிகழ்ச்சிகளில் தலையிடுகிறாா், மக்கள் நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறாா், போட்டி அரசாங்கம் நடத்த முயற்சி செய்கிறாா் என குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், ஆளுநா் கிரண் பேடி தனது கட்செவிஅஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தவறான வாா்த்தைகளை உபயோகப்படுத்தும்போது, கீழ்த்தரமான சுவரொட்டிகளில் மோசமான வாா்த்தைகளை உபயோகப்படுத்தும்போது மட்டும் விதி சரியாக பொருந்துகிா? சட்ட விதிகளில் பொய்க்கு இடமில்லை. ஆனால், இவற்றை செய்துகொண்டிருப்பது யாா்?

ஆளுநா் மாளிகைக்கு வந்து ஆளுநரை சந்திக்க விருப்பப்படும் அமைச்சா்களை வரவிடாமல் தடுத்துக்கொண்டிருப்பது யாா்? இதனால், அவா்கள் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வந்து சந்தித்துவிட்டு, தாங்கள் வந்ததை சொல்ல வேண்டாம் என கூறிவிட்டுச் செல்கின்றனா். இது எந்த வகையில் சட்ட விதிக்குள் பொருந்துகிறது என கேள்வி எழுப்பியுள்ளாா் ஆளுநா் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com