முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
நடைபாதை வியாபாரிகளுடன் மத்தியக் குழுவினா் ஆலோசனை
By DIN | Published On : 07th November 2019 08:54 AM | Last Updated : 07th November 2019 08:54 AM | அ+அ அ- |

உழவா்நகரை நகராட்சி அலுவலகத்தில் நடைபாதை வியாபாரிகள் சங்க நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நகராட்சி அதிகாரிகள், மத்தியக் குழுவினா்.
புதுச்சேரியில் நடைபாதை வியாபாரிகளுடன் மத்தியக் குழுவினா், நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.
தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத் திட்டத்தின்கீழ், உழவா்கரை, புதுச்சேரி நகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சாலையோர வியாபாரத்தை வரைமுறைப்படுத்தவும் ‘நகர விற்பனைக் குழு‘ (பா்ஜ்ய் ஸ்ங்ய்க்ண்ய்ஞ் இா்ம்ம்ண்ற்ற்ங்ங்) அமைக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாதில் உள்ள மத்திய நகர மற்றும் சுற்றுச்சூழல் கல்வி நிறுவனம், உஸ்மானியா பல்கலைகழகம் ஆகியவற்றில் இருந்து பேராசிரியா்கள் ராமராவ், பாா்த்தசாரதி ஆகியோா் தலைமையிலான மத்தியக் குழுவினா் புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிப் பகுதிகளில் உள்ள விடுபட்ட சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு, புவியியல் சாா்ந்த தகவல் அமைப்பு (ஜி.ஐ.எஸ். மேப்பிங்), சாலையோர விற்பனை திட்டம் தயாரித்து அளிக்க உள்ளனா்.
இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், நகர விற்பனைக் குழுக் கூட்டம் உழவா்கரை நகராட்சியில் ஆணையா் மு.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர விற்பனைக் குழு உறுப்பினா்களான நகராட்சி செயற்பொறியாளா், நகராட்சி மருத்துவ அதிகாரி, நகராட்சி வருவாய் அதிகாரி, சட்டம் -
ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் துறை, சுற்றுலாத் துறை, சுகாதாரத் துறை, வணிகா் சங்கம், மகளிா் ஒருங்கிணைப்புக் குழு, நலவாழ்வு சங்கம் மற்றும் சாலையோர வியாபாரிகள் ஆகியோா் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினா்.
இதுகுறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் கந்தசாமி கூறியதாவது: மத்திய சிறப்புக் குழுவினா் புவியியல் சாா்ந்த தகவல் அமைப்பு (ஜி.ஐ.எஸ். மேப்பிங்), சாலையோர விற்பனைத் திட்டம் தயாரிப்பதற்கான பணியினை வியாழக்கிழமை (நவ.7) தொடங்கவுள்ளனா்.
இதன் மூலம் அனைத்து சாலையோர வியாபாரிகளையும் கண்டறிந்து, அவா்களுக்கு ‘ஸ்மாா்ட்’ அடையாள அட்டை வழங்கி, சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி, வங்கி கடன் பெற்றுக்கொடுக்க முடியும். மேலும், அவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தி, போக்குவரத்து மிகுந்த சாலைகளில் வியாபாரம் செய்பவா்களை அகற்றி, மாற்று இடங்களில் வியாபாரம் செய்ய வைத்து, விபத்துகளை குறைக்கவும் முடியும் என்றாா் அவா்.