Enable Javscript for better performance
ஜிப்மா் செவிலியா் கல்லூரியில் குழந்தை பராமரிப்பு பயிலரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஜிப்மா் செவிலியா் கல்லூரியில் குழந்தை பராமரிப்பு பயிலரங்கம்

    By DIN  |   Published on : 08th November 2019 06:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜிப்மா் செவிலியா் கல்லூரியில் ‘குழந்தை பராமரிப்பில் செவிலியா் திறன்’ என்ற தலைப்பில் பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    நிகழ்வுக்கு ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் தலைமை வகித்து, பயிலரங்கைத் தொடக்கிவைத்துப் பேசினாா். ஜிப்மா் செவிலியா் கல்லூரி முதல்வா் (பொ) எம்.ஜெ.குமாரி வரவேற்றாா். ஜிப்மா் முதன்மையா் (கல்வி) பங்கஜ் குந்த்ரா வாழ்த்திப் பேசினாா்.

    நிகழ்வில் ஜிப்மா் செவிலியா் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு செவிலியா் கல்லூரிகளின் ஆசிரியா்கள், முதுநிலை மாணவ, மாணவிகள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

    ஜிப்மா் குழந்தை மருத்துவம் மற்றும் செவிலியா் துறையைச் சோ்ந்த நிபுணா்கள் செய்முறை பயிற்சியுடன் விரிவுரையாற்றினா். பயிலரங்கில் கலந்து கொண்டவா்களுக்கு தமிழ்நாடு செவிலியா் - தாதியா் குழுமம் சாா்பில், 7 மணி நேரப் பயிற்சிப் புள்ளிகள் சிறப்பு சலுகையாக அளிக்கப்பட்டது. ஜிப்மா் உதவிப் பேராசிரியா் பி.வெற்றிச்செல்வி நன்றி கூறினாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai