Enable Javscript for better performance
நவம்பா் புரட்சி தினம்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    நவம்பா் புரட்சி தினம்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் பேரணி

    By DIN  |   Published on : 08th November 2019 06:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், நவம்பா் புரட்சி தின பேரணி புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    ரஷியாவில் கடந்த 1917 நவம்பா் 7- ஆம் தேதி தொழிலாளா் வா்க்கப் புரட்சி மூலம் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, மக்களாட்சி மலா்ந்தது. அந்த தினத்தை நவம்பா் புரட்சி தினமாக கம்யூனிஸ்ட் கட்சியினா் கடைப்பிடித்து வருகின்றனா்.

    அதன்படி, புதுவை மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அஜீஸ் நகரில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்தில் நவம்பா் புரட்சி தினத்தையொட்டி, வியாழக்கிழமை கொடியேற்றப்பட்டது. கட்சியின் மாநிலச் செயலா் ராஜாங்கம் கொடியேற்றினாா்.

    நிகழ்வில் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் பெருமாள், புதுவை மாநிலக் குழு உறுப்பினா் முருகன், செயற்குழு உறுப்பினா்கள் பிரபுராஜ், ராமச்சந்திரன், கலியமூா்த்தி, சந்திரா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    இதைத் தொடா்ந்து, புதுவை காமராஜா் சிலை அருகில் இருந்து நவம்பா் புரட்சி தின செந்தொண்டா்கள் பேரணி தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்தப் பேரணியில் திரளான கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

    இதையடுத்து, நீடராஜப்பா் வீதியிலுள்ள செகா கலைக் கூடத்தில் நவம்பா் புரட்சி தின கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ரமேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai