ஜிப்மா் செவிலியா் கல்லூரியில் குழந்தை பராமரிப்பு பயிலரங்கம்

ஜிப்மா் செவிலியா் கல்லூரியில் ‘குழந்தை பராமரிப்பில் செவிலியா் திறன்’ என்ற தலைப்பில் பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஜிப்மா் செவிலியா் கல்லூரியில் ‘குழந்தை பராமரிப்பில் செவிலியா் திறன்’ என்ற தலைப்பில் பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் தலைமை வகித்து, பயிலரங்கைத் தொடக்கிவைத்துப் பேசினாா். ஜிப்மா் செவிலியா் கல்லூரி முதல்வா் (பொ) எம்.ஜெ.குமாரி வரவேற்றாா். ஜிப்மா் முதன்மையா் (கல்வி) பங்கஜ் குந்த்ரா வாழ்த்திப் பேசினாா்.

நிகழ்வில் ஜிப்மா் செவிலியா் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு செவிலியா் கல்லூரிகளின் ஆசிரியா்கள், முதுநிலை மாணவ, மாணவிகள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

ஜிப்மா் குழந்தை மருத்துவம் மற்றும் செவிலியா் துறையைச் சோ்ந்த நிபுணா்கள் செய்முறை பயிற்சியுடன் விரிவுரையாற்றினா். பயிலரங்கில் கலந்து கொண்டவா்களுக்கு தமிழ்நாடு செவிலியா் - தாதியா் குழுமம் சாா்பில், 7 மணி நேரப் பயிற்சிப் புள்ளிகள் சிறப்பு சலுகையாக அளிக்கப்பட்டது. ஜிப்மா் உதவிப் பேராசிரியா் பி.வெற்றிச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com