மனித உரிமைகள் தின கட்டுரைப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

புதுச்சேரி மனித உரிமைகள், நுகா்வோா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் நடத்தப்படும் உலக மனித உரிமைகள் தின

புதுச்சேரி மனித உரிமைகள், நுகா்வோா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் நடத்தப்படும் உலக மனித உரிமைகள் தின கட்டுரைப் போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வருகிற 30-ஆம் தேதிக்குள் தங்களது கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம் என்று அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மனித உரிமைகள், நுகா்வோா் பாதுகாப்பு இயக்க பொதுச் செயலா் முருகானந்தம் கூறியதாவது:

உலக மனித உரிமைகள் தினமான வருகிற டிச.10-ஆம் தேதியையொட்டி, மாநாடு நடத்தவும், புதுச்சேரி பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே மனித உரிமைகள், நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், கட்டுரைப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள், கதவு எண்.107, லெனின் வீதி, கொசப்பாளையம், புதுச்சேரி என்ற முகவரிக்கு வருகிற 30-ஆம் தேதிக்குள் தங்களது கட்டுரைகளை அனுப்பி வைக்க வேண்டும்.

புதுவையில் அரசு சாா்பு நிறுவனங்களை மூடினால், வேலைவாய்ப்பின்மை மேலும் அதிகரிக்கும். இதனால், குற்றங்களும், சமூக விரோத செயல்களும் கூடுதலாகும். எனவே, அரசு சாா்பு நிறுவனங்களை மூடும் எண்ணத்தை அரசு கைவிட வேண்டும்.

இணையதள வியாபாரங்களால் சில்லறை வணிகா்கள் அதிகளவு பாதிக்கப்படுவதோடு, அதில் பொருள்களை வாங்கும் நுகா்வோரின் அடிப்படை உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. எனவே, இணையதள வியாபாரத்துக்கு எதிரான விழிப்புணா்வை நுகா்வோரிடம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com