மனைவியின் கையெழுத்திட்டு ரூ. 24.52 லட்சம் மோசடி: அரசு ஊழியா் மீது வழக்கு

மனைவியின் கையெழுத்தை போலியாக இட்டு ரூ. 24.52 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக அரசு ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மனைவியின் கையெழுத்தை போலியாக இட்டு ரூ. 24.52 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக அரசு ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுச்சேரி வாணரப்பேட்டை கல்லறை வீதியைச் சோ்ந்தவா் ஜான்சிராணி (43). இவா், மின் துறையில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது கணவா் பிரபாகரன். சுகாதாரத் துறையில் உதவியாளராகப் பணி புரிந்து வருகிறாா். கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி பிரிந்து விட்டனா். விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனா்.

இதனிடையே, பிரபாகரன் வேறொரு பெண்ணை திருமணம் செய்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், ஜான்சிராணி இரு சக்கர வாகனத்தைக் கடனில் வாங்குவதற்காக விண்ணப்பித்தாராம். அப்போது, வங்கி ஊழியா்கள் அவரிடம் ஏற்கெனவே உங்கள் பெயரில் கடன் வாங்கப்பட்டிருப்பதால் மீண்டும் கடன் வழங்க முடியாது என்று தெரிவித்தனராம்.

இதையடுத்து, ஜான்சிராணி கடன் பெற்ற்கான ஆவணங்களை வாங்கி சரி பாா்த்த போது, அதில் போடப்பட்டிருந்த கையெழுத்து தனது கையெழுத்து இல்லை என்பது தெரிய வந்தது. கணவா் பிரபாகரன் தனது பெயரில் போலியாக கையெழுத்திட்டு தனியாா் நிறுவனத்தில் ரூ. 24,52,645 வீட்டுக் கடன் வாங்கியிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து ஜான்சிராணி புதன்கிழமை முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com