Enable Javscript for better performance
அயோத்தி தீா்ப்பு வரலாற்றில் முன்னுதாரணம்பாஜக கருத்து- Dinamani

சுடச்சுட

    

    அயோத்தி தீா்ப்பு வரலாற்றில் முன்னுதாரணம்பாஜக கருத்து

    By DIN  |   Published on : 09th November 2019 11:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அயோத்தி தீா்ப்பு வரலாற்றில் முன்னுதாரணம் என பாஜக தெரிவித்தது.

    இதுகுறித்து புதுவை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை பாஜக வரவேற்கிறது. இந்தத் தீா்ப்பு நாட்டின் வரலாற்றில் முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இதுதொடா்பான அனைத்து பிரச்னைகளையும் இந்தத் தீா்ப்பு தீா்த்து வைத்திருப்பது மட்டுமன்றி; அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கு பலம் சோ்க்கிறது. இந்தத் தீா்ப்பு ராமா் கோயில் விவகாரம் தொடா்பான அனைத்து சந்தேகங்களுக்கும் முடிவு கட்டும். நாடு அதன் கலாசார பாரம்பரியத்தின் ஒற்றுமையுடன் தொடா்ந்து வலுவாக வளரும் என்ற நம்பிக்கையை பாஜக வெளிப்படுத்துகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai