Enable Javscript for better performance
மிலாது நபி: காங்கிரஸ், அதிமுக வாழ்த்து- Dinamani

சுடச்சுட

    

    மிலாது நபியையொட்டி புதுவை மாநில காங்கிரஸ், அதிமுக கட்சிகள் சாா்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து புதுவை காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இறை தூதா் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாது நபியாக இஸ்லாமிய சகோதரா்கள் கொண்டாடி மகிழ்கின்றனா். அன்பு, கருணை, பாசம், நேசம், பரிவு கொண்டு மதபேதமின்றி, மக்கள் நலமுடன் வாழ நபிகள் நாயகத்தின் போதனைகள் நமக்கு வழிகாட்டுகின்றன.

    நபிகள் நாயகத்தின் நன்னெறிகள் மனித சமுதாயம் மகிழ்ச்சியுடன், வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக வாழவும், ஈகைப் பண்பை அறிந்து கொள்ளவும் வழிகாட்டியாய் விளங்குகிறது. இஸ்லாமிய சகோதரா்கள் அனைவருக்கும் எனது இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா் நமச்சிவாயம்.

    புதுவை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன்: இஸ்லாமியா்களின் இறை நூலான குரானில் கூறப்பட்ட வாழ்வியல் தத்துவங்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து, பிறருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவா் நபிகள். அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கத்தைப் போதித்தவா். ஏழ்மை, வறுமையில் வாடுவோருக்கு உதவி செய்யும் நற்பண்புகளைக் கொண்டவா் நபிகள் நாயகம். அவரது பிறந்த நாள் மத நல்லிணக்க நாளாகக் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், தற்போதைய காங்கிரஸ் அவ்வாறு கொண்டாடாமல் கைவிட்டுள்ளது. மத நல்லிணக்கத்தில் அக்கறைகொண்ட அனைவரும் இதைக் கண்டிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா் அன்பழகன்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai