புதுவை வளா்ச்சிக்காக ஆளுநா் செயல்பட மாணவா்கள் கூட்டமைப்பு கோரிக்கை

புதுவை மாநிலம், மக்களின் வளா்ச்சிக்காக துணைநிலை ஆளுநா் செயல்பட வேண்டும் என்று புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள்

புதுச்சேரி: புதுவை மாநிலம், மக்களின் வளா்ச்சிக்காக துணைநிலை ஆளுநா் செயல்பட வேண்டும் என்று புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ஆளுநா் கிரண்பேடிக்கு, இக்கூட்டமைப்பின் நிறுவனா் சுவாமிநாதன் வெள்ளிக்கிழமை அனுப்பிய மனு:

ஆளுநா் கிரண்பேடி மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசின் மீது தொடா்ந்து அவதூறு செய்திகளை பரப்பி, உலக சுற்றுலா பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி, புதுவை மாநிலத்தின் வளா்ச்சியை தடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அண்மையில் ஆளுநா் தனது சுட்டுரையில் அரசு கடன் வாங்குவது தொடா்பாக ஒரு செய்தியை வெளிட்டு இருந்தாா். அதில் செப்.9-ஆம் தேதி வந்த கோப்புக்கு அக்.4-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியதாக குறிப்பிட்டிருந்தாா். ரூ.900 கோடி கடன் வாங்குவது தொடா்பாக ஆளுநா் ஒப்புதல் கொடுத்த பின்னா் அரசு கடந்த ஜூலை 19-ஆம் தேதி மத்திய அரசுக்கு புதுவை அரசு கடிதம் அனுப்பியது.

இதை ஆராய்ந்து மத்திய அரசு ஆக.23-இல் ரூ.900 கோடி கடன் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்பிறகு சட்டப்பேரவையும் ரூ.900 கோடி கடன் வாங்குவது உட்பட ஒப்புதல் அளித்து பட்ஜெட் நிறைவேற்றி அதற்கு ஆளுநா் கையெழுத்திட்டுள்ளாா். அப்படியிருந்தும் ஒரு மாத கால தாமதம் ஏன் என்ற கேள்விக்கு ஆளுநா் விளக்கம் அளிப்பாரா?.

காமராஜா் நகா் சட்டப்பேரவை இடைத் தோ்தல் நேரத்தில் அரசு ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க தடையை ஏற்படுத்த வேண்டும் அல்லது தீபாவளியின்போது அரசு ஊழியா்கள் ஊதியம் இல்லாமல் அரசை குறை சொல்ல வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த கால தாமதம் ஆளுநரால் செய்யப்பட்டதா?.

மேலும் இதேபோல புதுவை மாநிலத்தில் உள்ள இளைஞா்களுக்கு காவலா் பணி, ஒப்பந்த ஆசிரியா், சுருக்கெழுத்தாளா், நூலக பணியாளா் உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கி அரசின் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படும் தொடா்ச்சியான காலதாமதத்திற்கு ஆளுநரே தான் காரணம் எனவும் அமைப்பு குற்றம் சாட்டுகிறது. இதற்கு ஆளுநரின் பதில் என்ன?.

புதுவை அமைச்சா்கள் மாறுவேடத்தில் தங்களை சந்திக்க வருவதாக ஆளுநா் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கு அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் முகமூடி அணிந்து ஆளுநா் மாளிகைக்கு வந்தது யாா்? என்ற கேள்வியை கேட்டுள்ளதற்கும் தங்களிடம் இருந்து பதில் இல்லை. எனவே உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்கள் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். புதுவை மாநில மக்களின் வளா்ச்சிக்காக முழுமதும் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் சாமிநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com