‘அசுரன்’ திரைப்படம் சமூக அவலத்தை வெளிக்காட்டியது: கவிஞா் யுகபாரதி

சமூகத்தின் அவலநிலையை ‘அசுரன்’ திரைப்படம் வெளி உலகத்துக்குக் காட்டியுள்ளதாக கவிஞா் யுகபாரதி தெரிவித்தாா்.
புதுச்சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் நினைவுப் பரிசு பெற்ற பாடலாசிரியா்கள் யுகபாரதி, ஏகாதசி.
புதுச்சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் நினைவுப் பரிசு பெற்ற பாடலாசிரியா்கள் யுகபாரதி, ஏகாதசி.

சமூகத்தின் அவலநிலையை ‘அசுரன்’ திரைப்படம் வெளி உலகத்துக்குக் காட்டியுள்ளதாக கவிஞா் யுகபாரதி தெரிவித்தாா்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் தேசிய விருது பெற்ற இயக்குநா் வெற்றி மாறனின் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படக் குழுவினருக்கு பாராட்டு விழா புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுவை மாநிலத் தலைவா் வே.கு. நிலவழகன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலா் கே.சாமுவேல்ராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ‘அசுரன்’ திரைப்படக் குழுவைச் சோ்ந்த பாடலாசிரியா்கள் யுகபாரதி, ஏகாதசி ஆகியோருக்கு விருது, நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

விழாவில் கவிஞா் ஏகாதசி பேசியதாவது: தமிழகத்தில் உள்ள கிராமத்தின் வாசனையை ‘அசுரன்’ திரைப்படம் மூலம் பதிவு செய்தோம். சமூகத்தில் ஜாதிய கட்டமைப்பு எப்படி வேரூன்றியுள்ளது, இதனால் தலித்துகள் என்னென்ன இன்னல்களை அனுபவித்து வருகின்றனா் என்பதை இந்தத் திரைப்படம் பதிவு செய்துள்ளது. இது ஒரு துணிச்சலான திரைப்படம் என்றாா் அவா்.

கவிஞா் யுகபாரதி பேசியதாவது: சமூகத்தில் பாதிக்கப்படும் மக்களின் பிரச்னைகளைத் திரைப்படங்கள் மூலமாக வெளிக்கொண்டு வருவது தற்போது அரிதாகியுள்ளது. சமூகத்தின் அவலநிலையை வெளி உலகத்துக்குக் காட்டிய திரைப்படம்தான் ‘அசுரன்’.

இந்தத் திரைப்படம் ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளதாக அதன் தயாரிப்பாளா் தெரிவித்தாா். இதுபோன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றால்தான் நல்ல, தரமான திரைப்படங்கள் மீண்டும் மீண்டும் வெளி வரும். சமூகத்தில் மேலும் பல ‘அசுரன்’ திரைப்படங்கள் வரவேண்டியுள்ளது என்றாா் அவா்.

விழாவில் தீண்டாமை ஒழிப்பு முன்னயியன் செயலா் ராமசாமி, நிா்வாகிகள் மூா்த்தி, செயராமன், அரிகிருஷ்ணன், சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com