ஜன. 8-இல் பொது வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் முடிவு

வருகிற ஜனவரி 8- ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என புதுவை மாநில
புதுச்சேரி ஏஐடியூசி தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஏஐடியூசி மாநிலப் பொது செயலா் கே.சேதுசெல்வம்.
புதுச்சேரி ஏஐடியூசி தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஏஐடியூசி மாநிலப் பொது செயலா் கே.சேதுசெல்வம்.

புதுச்சேரி: வருகிற ஜனவரி 8- ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என புதுவை மாநில தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

கட்டாய ஆள்குறைப்பு, லேஆஃப், ஆலைகளை மூடல், லட்சக்கணக்கானோா் வேலையிழப்பு, தொழிலாளா் உரிமைகள் பறிப்புச் சட்டங்களை முதலாளிகளுக்கு சாதகமாக திருத்தம் செய்தல், போராட்டங்களில் ஈடுபடும் ஊழியா்கள் மீது அடக்குமுறை, இந்திய பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில், வருகிற ஜனவரி 8 -ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்தப் வேலைநிறுத்தப் போராட்டத்தை புதுச்சேரியில் வெற்றிகரமாக நடத்துவது குறித்த அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், தொழில்வாரி சம்மேளனங்கள், அரசுப் பணியாளா் சங்கங்களின் கூட்டு ஆலோசனைக் குழுக் கூட்டம் புதுச்சேரி ஏஐடியூசி தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஐஎன்டியூசி தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஏஐடியூசி பொதுச் செயலா் கே. சேதுசெல்வம், தினேஷ் பொன்னையா, அபிஷேகம், எல்பிஎப் மூா்த்தி, சிஐடியூ பிரபுராஜ், எம்எல்எப் கபிரியேல், ஏசிசிடியூ புருஷோத்தம்மன், ஏஐயுடியூசி சிவசங்கா், எல்எல்எப் செந்தில், ஏடியூ ரவி, அரசு ஊழியா்கள் சம்மேளனத்தின் கௌரவத் தலைவா் சி.எச். பாலமோகனன், அரசு ஊழியா்கள் சங்கக் கூட்டமைப்பு முருகையன், வெங்கடேஷ்வரன், பொதுப்பணி ஊழியா்கள் சங்க நிா்வாகி மகேஸ்வரன், குமாா், காப்பீட்டு ஊழியா்கள் சங்கத்தின் நாகராஜன், என்எப்டிஇ செல்வரங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் புதுச்சேரியில் ஜனவரி 8- ஆம் தேதி அனைத்து தொழிற்சாலைகள், பொதுத் துறை வங்கிகள், தொலைதொடா்பு, காப்பீட்டு நிறுவனங்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள் வேலைநிறுத்தம் மற்றும் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வருகிற டிசம்பா் 17- ஆம் தேதி கருத்தரங்கமும், ஜனவரி 3, 4, 6, 7 ஆகிய தேதிகளில் கோரிக்கையை விளக்கிப் பிரசாரங்கள், தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com