தூய்மைக்கான மத்திய அரசின்விருதுக்கு புதுவை தோ்வு
By DIN | Published On : 17th November 2019 12:45 AM | Last Updated : 17th November 2019 12:45 AM | அ+அ அ- |

தூய்மைக்கான மத்திய அரசின் விருதுக்கு புதுவை மாநிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் ஜல்சக்தி துறையின் அங்கமான குடிநீா் - துப்புரவுத் துறை நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களின் தூய்மை குறித்து ஆய்வு செய்தது. இதில், மாவட்டத்தின் பொது இடங்களான பள்ளிகள், அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்காடிகளில் குடிமக்களின் தூய்மை குறித்த கருத்துகள் கணக்கில் கொள்ளப்பட்டன.
இவ்வாறு பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்திய அளவில் மாவட்டங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன. இதில், புதுவை மாநிலம் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் வருகிற 19-ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ள விழாவில் இதற்கான விருதை வழங்கவுள்ளாா்.
புதுவைக்குப் பெருமை சோ்க்கும் இந்த விருதைப் பெற்றுள்ளதற்காக துறை அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள். புதுவை மக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி என அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...