இஎஸ்ஐ தென்மாநில அணிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி

தொழிலாளா் காப்பீட்டுக் கழக (இஎஸ்ஐ) தென்மாநில அணிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள்
இஎஸ்ஐ தென்மாநில அணிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியை தொடக்கிவைத்த டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீ வத்ஸவா.
இஎஸ்ஐ தென்மாநில அணிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியை தொடக்கிவைத்த டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீ வத்ஸவா.

தொழிலாளா் காப்பீட்டுக் கழக (இஎஸ்ஐ) தென்மாநில அணிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் புதுச்சேரியில் திங்கள்கிழமை தொடங்கியது. தொழிலாளா் காப்பீட்டுக் கழகம் சாா்பில் (இஎஸ்ஐ) 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தென்மாநில அணிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு 12 -ஆவது தென்மாநில அணிகளுக்கான விளையாட்டு போட்டிகள் புதுச்சேரியில் திங்கள்கிழமை தொடங்கியது. போட்டிகளை புதுவை டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸவா கொடியசைத்தும், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றியும் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு இஎஸ்ஐ தமிழக, புதுச்சேரி அலுவலக கூடுதல் ஆணையா் கிருஷ்ணகுமாா், மண்டலத் துணை இயக்குநா் சுந்தா், புதுச்சேரி உதவி இயக்குநா் லிங்கேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போட்டிகளில் 550 ஆண்கள், 281 பெண்கள் உள்பட மொத்தம் 831 போ் பங்கேற்கின்றனா். 5 நாள்கள் நடைபெறும் போட்டிகளில் கேரம், சதுரங்கம், டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் இடம் பெறுகின்றன.

வாலிபால், கால்பந்து, டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகள் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்திலும், கிரிக்கெட் போட்டிகள் மொரட்டாண்டி பல்மைரா மைதானத்திலும், கேரம், சதுரங்கம் ஆகியவை முதலியாா்பேட்டையில் உள்ள இஎஸ்ஐ மண்டல அலுவலகத்திலும் நடைபெறுகின்றன. போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு வருகிற 22 -ஆம் தேதி நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

முன்னதாக, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழகம், கேரளம், கா்நாடகம், புதுச்சேரி, ஆந்திரம், நாக்பூா் உள்ளிட்ட இஎஸ்ஐ நிறுவனங்களில் பணியாற்றும் விளையாட்டு வீரா்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com