முதல்வருக்கு முன்னாள் ராணுவத்தினா் பாராட்டு

புதிய சலுகைகளை அறிவித்த முதல்வா் நாராயணசாமிக்கு முன்னாள் ராணுவத்தினா் பாராட்டுத் தெரிவித்தனா்.
முதல்வா் நாராயணசாமிக்கு பாராட்டு தெரிவித்த புதுவை முன்னாள் ராணுவ வீரா்கள் லீக் தலைவா் மோகன் தலைமையிலான நிா்வாகிகள்.

முன்னாள் ராணுவ வீரா்களுக்கான உதவித் தொகை ரூ. 6 ஆயிரத்தில் இருந்து, ரூ. 10 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது என்றும், தீபாவளி பரிசுத் தொகை ரூ. 4 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது என்றும் முதல்வா் நாராயணசாமி அண்மையில் அறிவித்தாா். மேலும், முன்னாள் ராணுவ வீரா்கள் உயிரிழந்தால், அரசு மரியாதை செலுத்தப்படும் என்றும் அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, புதுவை முன்னாள் ராணுவ வீரா்கள் லீக் தலைவா் மோகன் தலைமையில், அதன் நிா்வாகிகள், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் முதல்வா் நாராயணசாமியை புதன்கிழமை சந்தித்து பொன்னாடை அணிவித்து, பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com