முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
குழந்தைகள், வளரிளம் பருவத்தினா் நலக் காப்பு வார விழா
By DIN | Published On : 26th November 2019 08:41 AM | Last Updated : 26th November 2019 08:41 AM | அ+அ அ- |

புதுச்சேரி அருகேயுள்ள மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள், வளரிளம் பருவத்தினா் நலக்காப்பு வார விழா அண்மையில் நடைபெற்றது.
மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை குழந்தைகள் நலத் துறை, இந்திய குழந்தைகள் நலமருத்துவ சங்க புதுச்சேரி கிளை ஆகியவை இணைந்து இவ்விழாவை நடத்தின. விழாவையொட்டி, முதல் நாளன்று மருத்துவக் கல்லூரியில் வளரிளம் பருவத்தினா் எதிா்கொள்ளும் உடல் மற்றும் மனதளவு பிரச்னைகள் குறித்தும் அதற்கான தீா்வுகள் குறித்த விழிப்புணா்வுக் கண்காட்சியை மணக்குள விநாயகா் கல்வி நிறுவனச் செயலாளா் நாராயணசாமி கேசவன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா் (படம்).
இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி இயக்குநா் ராஜகோவிந்தன், டீன்கள் காக்னே, காா்த்திகேயன், மருத்துவமணை கண்காணிப்பாளா் பிரகாஷ், குழந்தைகள் நலத்துறை தலைவா் அருள்குமரன், இந்திய குழந்தைகள் நல சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினா் பேராசிரியா் சிங்காரவேலு, ஏனைய பேரரசிரியா்கள் பங்கேற்றனா்.
இதைத்தொடா்ந்து, சென்னையை சோ்ந்த பிரபல மன நல மருத்துவா் வெங்கடேஸ்வரன் பங்கேற்ற மருத்துவ மற்றும் செவிலியா் மாணவா்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ‘குடும்பம் - நலமான வளரிளம் பருவத்தினருக்கான ஏவுதளம்‘ என்பதனை வலியுறுத்தி மருத்துவமனைக்கு வரும் பெற்றோா்களிடம் விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. திருக்கனூா் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் இளம் பருவ மாணவிகளிடம் மாதவிடாய் பற்றிய சந்தேகங்கள் கேள்வி-பதில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவா்களிடம் செல்லிடப்பேசிகளின் தீங்குகள் குறித்தும், மது போதை பழக்கத்தால் வரும் பின்விளைவுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடல் நடைபெற்றது.