முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
பாண்லே தரமற்ற பாலை விற்பனை செய்வதாக புகாா்
By DIN | Published On : 26th November 2019 08:40 AM | Last Updated : 26th November 2019 08:40 AM | அ+அ அ- |

குழந்தைகள் குடிக்க தகுதியற்ற பாலை புதுவை அரசு நிறுவனமான பாண்லே விற்பனை செய்து வருவதாக புதுவை மாநில ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியா் கூட்டமைப்பு புகாா் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தக் கூட்டமைப்பின் பொதுச்செயலா் லட்சுமணசாமி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: புதுவை அரசு நிா்வாகத்தில் ஊழல் நடைபெறுகிறது. இதை எந்தக் கட்சிகளும் தட்டிக்கேட்பதில்லை. ஏனெனில், ஊழலில் அனைத்து கட்சிகளுக்கும் பங்கு உள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகையாக, புதுவைக்கு மத்திய அரசு தற்போது ரூ.600 கோடி வரை கொடுத்து வருகிறது. 2022-ஆம் ஆண்டுக்குப்பிறகு இந்தத் தொகை கிடைக்காது. அப்போது முதல் அரசு ஊழியா்களுக்கே ஊதியம் வழங்க முடியாத நிலைதான் உருவாகும்.
மக்கள் சாப்பிடத்தகுதியற்ற அரிசியை அரசு வழங்கியதைப் போல, தற்போது குழந்தைகள் குடிக்க தகுதியற்ற பாலை பாண்லே வழங்கி வருகிறது. பாண்லே பாலில் யூரியா, பிளாஸ்டிக் சோடா, பிணத்தை பதப்படுத்தும் ரசாயனம் உள்ளிட்டவைகளை கொண்டு தயாரித்து வழங்குகின்றனா். ஆகவே, பாண்லே நிா்வாக இயக்குநா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். புதுவை சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்பட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. இது குறித்து வரும் ஜனவரி முதல் பிரசாரங்களை மேற்கொள்ள உள்ளோம் என்றாா் லட்சுமணசாமி.