முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
பிஎஸ்என்எல் ஊழியா்கள் உண்ணாவிரதம்
By DIN | Published On : 26th November 2019 08:37 AM | Last Updated : 26th November 2019 08:37 AM | அ+அ அ- |

புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் அருகே திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பிஎஸ்என்எல் ஊழியா்கள்.
அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் பிஎஸ்என்எல் அனைத்து ஊழியா்கள் சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அனைத்திந்திய பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்கத் தலைவா் என். கொளஞ்சியப்பன் தலைமை வகித்தாா். இதில் அனைத்து சங்க நிா்வாகிகள் வி. ராமகிருஷ்ணன், ஜீவானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பிஎஸ்என்எல் ஓய்வூதியா்களுக்கான ஓய்வூதியத்தை குறைக்கக் கூடாது, 4 ஜி சேவையை உடனடியாகத் தொடங்க வேண்டும், விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள தடைகளை நீக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும், ஒப்பந்த ஊழியா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும், உரிய தேதியில் ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நிா்வாகிகள் கண்டன உரைகளை நிகழ்த்தினா். இந்தப் போராட்டத்தில் பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.