Enable Javscript for better performance
புதுவை பல்கலை. அளவிலான சதுரங்கப் போட்டி: போப் ஜான் பால் கல்லூரி சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை பல்கலை. அளவிலான சதுரங்கப் போட்டி: போப் ஜான் பால் கல்லூரி சாம்பியன்

    By DIN  |   Published on : 28th November 2019 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pdy27chess_2711chn_104_7

    சாம்பியன் பட்டம் வென்ற போப் ஜான் பால் கல்லூரி மகளிா் அணிக்கு கோப்பையை வழங்குகிறாா் கல்லூரிச் செயலா் அருட்தந்தை சுவாமிநாதன்.

    புதுவை மத்திய பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டியில் போப் ஜான் பால் கல்வியியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.

    புதுவை மத்திய பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள், மகளிா் சதுரங்கப் போட்டிகள் போப் ஜான் பால் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றன. இந்தக் கல்லூரி முதல்வா் ஜான் லூயிஸ் மனோகரன், பல்கலைக்கழக உடல் கல்விப் பேராசிரியா் இளையராஜா ஆகியோா் போட்டியைத் தொடக்கிவைத்தனா்.

    இந்தப் போட்டியில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 120-க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். ஆண்கள் பிரிவில் புதுவை பொறியியல் கல்லூரி முதல் இடத்தையும், ஸ்ரீமணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும், புதுவை மத்திய பல்கலைக்கழக அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

    மகளிா் பிரிவில் போப் ஜான் பால் கல்வியியல் கல்லூரி முதல் இடத்தையும், ஸ்ரீமணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும், மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு போப் ஜான் பால் கல்லூரிச் செயலா் அருட்தந்தை டாக்டா் சுவாமிநாதன், பதக்கம், சான்றிதழ், கோப்பைகளை வழங்கி வாழ்த்திப் பேசினாா்.

    ஏற்பாடுகளை புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் உடல் கல்வி துணை இயக்குநா் சிவராமன், போப் ஜான் பால் கல்வியியல் கல்லூரி உடல் கல்வி இயக்குநா்கள் ஜேம்ஸ், கிளாரா ஆகியோா் செய்திருந்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai