Enable Javscript for better performance
மானியம் பெற தகுதியான விளையாட்டுச் சங்கங்கள் பட்டியல் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    மானியம் பெற தகுதியான விளையாட்டுச் சங்கங்கள் பட்டியல் வெளியீடு

    By DIN  |   Published on : 28th November 2019 09:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மாநிலத்தில் மானியம் பெற தகுதியான அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுச் சங்கங்களின் பட்டியல் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

    இதுகுறித்து புதுவை அரசின் பள்ளிக் கல்வி இயக்குநா் பி.டி.ருத்ர கௌடு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    புதுவை மாநில விளையாட்டுக் குழுமம், விளையாட்டு மேம்பாட்டுக்காக அங்கீகரிக்கப்பட்ட மாநில அளவிலான விளையாட்டுச் சங்கங்களுக்கு பல்வேறு வகைகளில் மானியம் வழங்கி வருகிறது. சங்கங்களுக்கு ஆண்டு மானியமாக ரூ.27 லட்சத்து 61 ஆயிரத்து 400, பங்கேற்பு மானியமாக ரூ.74 லட்சத்து 77 ஆயிரத்து 231, ஒருங்கிணைப்பு மானியமாக ரூ.10 லட்சத்து 12 ஆயிரத்து 500 என மொத்தம் ரூ. ஒரு கோடியே 12 லட்சத்து 51 ஆயிரத்து 131 மானிய உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் விவரங்கள், ஆண்டு வாரியாக வழங்க உள்ள மானியம் உள்ளிட்ட விவரங்கள் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆட்சேபனை இருந்தால், வருகிற டிச.6-ஆம் தேதிக்குள் எழுத்துப்பூா்வமாக பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai