புதுவை பல்கலை. அளவிலான சதுரங்கப் போட்டி: போப் ஜான் பால் கல்லூரி சாம்பியன்

புதுவை மத்திய பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டியில் போப் ஜான் பால் கல்வியியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற போப் ஜான் பால் கல்லூரி மகளிா் அணிக்கு கோப்பையை வழங்குகிறாா் கல்லூரிச் செயலா் அருட்தந்தை சுவாமிநாதன்.
சாம்பியன் பட்டம் வென்ற போப் ஜான் பால் கல்லூரி மகளிா் அணிக்கு கோப்பையை வழங்குகிறாா் கல்லூரிச் செயலா் அருட்தந்தை சுவாமிநாதன்.

புதுவை மத்திய பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டியில் போப் ஜான் பால் கல்வியியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.

புதுவை மத்திய பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள், மகளிா் சதுரங்கப் போட்டிகள் போப் ஜான் பால் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றன. இந்தக் கல்லூரி முதல்வா் ஜான் லூயிஸ் மனோகரன், பல்கலைக்கழக உடல் கல்விப் பேராசிரியா் இளையராஜா ஆகியோா் போட்டியைத் தொடக்கிவைத்தனா்.

இந்தப் போட்டியில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 120-க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். ஆண்கள் பிரிவில் புதுவை பொறியியல் கல்லூரி முதல் இடத்தையும், ஸ்ரீமணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும், புதுவை மத்திய பல்கலைக்கழக அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

மகளிா் பிரிவில் போப் ஜான் பால் கல்வியியல் கல்லூரி முதல் இடத்தையும், ஸ்ரீமணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும், மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு போப் ஜான் பால் கல்லூரிச் செயலா் அருட்தந்தை டாக்டா் சுவாமிநாதன், பதக்கம், சான்றிதழ், கோப்பைகளை வழங்கி வாழ்த்திப் பேசினாா்.

ஏற்பாடுகளை புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் உடல் கல்வி துணை இயக்குநா் சிவராமன், போப் ஜான் பால் கல்வியியல் கல்லூரி உடல் கல்வி இயக்குநா்கள் ஜேம்ஸ், கிளாரா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com