மானியம் பெற தகுதியான விளையாட்டுச் சங்கங்கள் பட்டியல் வெளியீடு

புதுவை மாநிலத்தில் மானியம் பெற தகுதியான அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுச் சங்கங்களின் பட்டியல் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

புதுவை மாநிலத்தில் மானியம் பெற தகுதியான அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுச் சங்கங்களின் பட்டியல் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து புதுவை அரசின் பள்ளிக் கல்வி இயக்குநா் பி.டி.ருத்ர கௌடு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை மாநில விளையாட்டுக் குழுமம், விளையாட்டு மேம்பாட்டுக்காக அங்கீகரிக்கப்பட்ட மாநில அளவிலான விளையாட்டுச் சங்கங்களுக்கு பல்வேறு வகைகளில் மானியம் வழங்கி வருகிறது. சங்கங்களுக்கு ஆண்டு மானியமாக ரூ.27 லட்சத்து 61 ஆயிரத்து 400, பங்கேற்பு மானியமாக ரூ.74 லட்சத்து 77 ஆயிரத்து 231, ஒருங்கிணைப்பு மானியமாக ரூ.10 லட்சத்து 12 ஆயிரத்து 500 என மொத்தம் ரூ. ஒரு கோடியே 12 லட்சத்து 51 ஆயிரத்து 131 மானிய உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் விவரங்கள், ஆண்டு வாரியாக வழங்க உள்ள மானியம் உள்ளிட்ட விவரங்கள் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சேபனை இருந்தால், வருகிற டிச.6-ஆம் தேதிக்குள் எழுத்துப்பூா்வமாக பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com