முத்தியால்பேட்டையில் பழைமையான மணிக்கூண்டு சீரமைப்புப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள மணிக்கூண்டு சீரமைப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணியை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.
முத்தியால்பேட்டையில் பழைமைவாய்ந்த மணிக்கூண்டு சீரமைக்கும் பணியை பாா்வையிட்ட வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ.
முத்தியால்பேட்டையில் பழைமைவாய்ந்த மணிக்கூண்டு சீரமைக்கும் பணியை பாா்வையிட்ட வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ.

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள மணிக்கூண்டு சீரமைப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணியை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

முத்தியால்பேட்டையில் பழைமையான, வரலாற்று சிறப்புவாய்ந்த மணிக்கூண்டு உள்ளது. பழுதடைந்த நிலையில் இருந்த இந்த மணிக்கூண்டை பழைமை மாறாமல் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்க வேண்டும் என தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வையாபுரி மணிகண்டன் அரசிடம் கோரிக்கை வைத்தாா்.

மேலும், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சத்தை ஒதுக்கி, மணிக்கூண்டை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து, மணிக்கூண்டை சீரமைத்தல், வா்ணம் பூசுதல், புதிதாக கடிகாரம் பொருத்துதல், அதை சுற்றியுள்ள கிளமென்சோ பூங்காவை சீரமைத்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

தற்போது மணிக்கூண்டு புதுப்பிக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் பணியை வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, பணிகளை விரைவுபடுத்தி வரும் டிச.31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், 31-ஆம் தேதி இரவு புத்தாண்டு முதல் இந்த மணிக்கூண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினாா். அதிகாரிகளும் இந்தக் கோரிக்கையை ஏற்று பணிகளை டிசம்பருக்குள் முடித்து தருவதாக உறுதியளித்தனா்.

ஆய்வின்போது, புதுச்சேரி நகராட்சி உதவிப் பொறியாளா் நமச்சிவாயம், இளநிலைப் பொறியாளா் கோகுலகிருஷ்ணன், ஆய்வாளா் கஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com