சிறப்பு வகுப்புகளை அனுமதிக்கக் கோரிக்கை

பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பு வகுப்புகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி யூனியன்

பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பு வகுப்புகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவா்கள் - பெற்றோா்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து அதன் தலைவா் நாராயணசாமி, பொருளாளா் விசிசி.நாகராஜன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடத்தப்படுகிறது. இந்த மூன்று வகுப்புகளுக்கும் கல்வி பயிலும் நேரத்தை நீட்டிக்க வேண்டும். புதிய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாலும், மாணவா்கள் புரிந்து படிப்பதற்கும், ஆசிரியா்கள் திறம்பட பாடம் நடத்துவதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது.

தற்போது, மாலை 4.30 மணி வரை மட்டுமே பள்ளிகள் இயங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதால், பெற்றோா்கள் தனியாா் வகுப்புகளில் சோ்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவா். ஆகவே, மாணவா்கள், பெற்றோா்களின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும். புதிய பாடத் திட்டங்களின் அடிப்படையில்தான் மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தோ்வுக்கு கேள்விகள் கேட்கப்படுகின்றன.

எனவே, புதுவை அரசு 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே காலை 8 முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் நடத்த சிறப்புச் சட்டம் இயற்றி, அனுமதி அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com